ராமேசுவரத்தில் இருந்து 6 மாநிலங்களைச் சேர்ந்த 173 பக்தர்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைப்பு

ராமேசுவரம் வந்த 6 மாநிலங்களைச் சேர்ந்த 173 பக்தர்கள் 51 நாள்களுக்குப் பின் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு 6 பேருந்துக்களில் அவரவர் மாநிலங்களுக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனர். 
ராமேசுவரத்தில் இருந்து 6 மாநிலங்களைச் சேர்ந்த 173 பக்தர்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைப்பு

ராமேசுவரம் வந்த 6 மாநிலங்களைச் சேர்ந்த 173 பக்தர்கள் 51 நாள்களுக்குப் பின் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு 6 பேருந்துக்களில் அவரவர் மாநிலங்களுக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனர். 

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் இந்துக்களின் புனிதத் தலமாக உள்ளது. ஆண்டுதோறும் 1.5 கோடி பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்லுகின்றனர். இதில் அதிகளவில் வடமாநில பக்தர்கள். இந்நிலையில், கடந்த மார்ச் 15 முதல் 20ஆம் தேதிக்குள் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 83 பேர், உத்திரப்பிரதேசம் 52, மத்தியப்பிரதேசம் 33, சத்தீஸ்கர் 2, தில்லி 2, மகாராஷ்டிரம் 1 என மொத்தம் 173 பேர் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தனர். 

மூன்று நாள்கள் தங்கியிருந்த பக்தர்கள் மீண்டும் அவரது மாநிலங்களுக்கு செல்லும் போது கரோனா நோய் பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய அரசு ஊடரங்கு பிறப்பித்தது. இதன் பின்னர் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் இவர்கள் அனைவரும் அந்தந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் தாங்கள் வைத்திருந்த பணம் முழுமையாக செலவானது. இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். 

மேலும் அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் பாஜக நிர்வாகிகள் வழங்கி வந்தனர். தங்களது மாநிலத்திற்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, ராமேசுவரத்தில் 51 நாள்கள் தங்கிருந்த 6 மாநிலங்களைச் சேர்ந்த 173 பக்தர்கள் சனிக்கிழமை சொந்த மாநிலத்திற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து, சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், தியாகராஜன் தலைமையில் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 

இதன் பின்னர் ஒவ்வொரு பேருந்துக்களில் சமூக இடைவெளியுடன் 30 பக்தர்கள் மட்டும் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை ராமேசுவரம் வட்டாச்சியர் அப்துல்ஜப்பார் மற்றும் காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் எம்.மகேஸ் உள்ளிட்டவர்கள் பேருந்தில் ஆய்வு செய்து அனுப்பி வைத்தனர். தங்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து சொந்த மாநிலத்திற்கு செல்ல ஏற்பாடு செய்த அரசுக்கும், அதிகாரிகளுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com