விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமுடக்கத்தை மீறி திறக்கப்பட்ட கடைகள் மூடல்

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமுடக்கத்தை மீறி திறக்கப்பட்ட கடைகளை காவல்துறையினர் எச்சரித்து மூடினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமுடக்கத்தை மீறி திறக்கப்பட்ட கடைகள் மூடல்

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமுடக்கத்தை மீறி திறக்கப்பட்ட கடைகளை காவல்துறையினர் எச்சரித்து மூடினர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கொரானா பரவல் தடுப்புக்கான பொதுமுடக்கம் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் தொடர்ந்து வருகிறது. மாவட்டத்தில் 298 பேருக்கு தோற்று ஏற்பட்டுள்ளது. இதனால் 93 ஊராட்சிகள், விழுப்புரம் திண்டிவனம், செஞ்சி, விக்கிரவாண்டி, அரகண்டநல்லூர் ஆகிய நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகள் தொற்றுள்ள பகுதிகளாக உள்ளன.

இந்த நிலையில், தமிழக அரசு சில தளர்வு செய்து தேனிர் கடைகள், தனியார் நிறுவனங்கள் போன்றவை திறந்து செயல்படும் என அறிவித்துள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகளவில் தொற்று உள்ளதால், தொற்றுள்ள பகுதிகளுக்கு தடை தொடர்ந்துள்ளது. ஆனால் தமிழக அரசு அறிவித்த படி திங்கட்கிழமை காலை விழுப்புரம் திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் காலையிலேயே பலர் கடைகளை திறந்தனர்.

இதனால் பயங்கரமான கூட்ட நெரிசல் இருந்தது. இதனையடுத்து விழுப்புரத்தில் காவல்துறையினர், வருவாய்த்துறை அதிகாரிகள் ரோந்து சென்று திறக்கப்பட்ட கடைகளை மூடுமாறு எச்சரித்து சென்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் பொது முடக்கம் குறித்து தெளிவான அறிவிப்பு வெளியாகாததால் பல வியாபாரிகள் கடையை திறந்து பிறகு காவல்துறையினர் எச்சரித்ததால் மூடி சென்றனர்.

இதனால் விழுப்புரம் திண்டிவனம் செஞ்சி கடைவீதிகளில் திங்கள்கிழமை காலை முதல் பகல் 11 மணி வரை கூட்ட நெரிசல் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com