மாலத்தீவிலிருந்து கப்பலில் நாடு திரும்பிய 87 பேர் முகாம்களில் தனிமைப்படுத்தல்

மாலத்தீவிலிருந்து கடற்படை கப்பல் மூலம் நாடு திரும்பியவர்களில் ஒரு கர்ப்பிணி பெண் உள்பட 87 பேர் தமிழக - கேரள மாநில எல்லைப் பகுதிகளான களியக்காவிளை
மாலத்தீவிலிருந்து கப்பலில் நாடு திரும்பிய 87 பேர் முகாம்களில் தனிமைப்படுத்தல்

மாலத்தீவிலிருந்து கடற்படை கப்பல் மூலம் நாடு திரும்பியவர்களில் ஒரு கர்ப்பிணி பெண் உள்பட 87 பேர் தமிழக - கேரள மாநில எல்லைப் பகுதிகளான களியக்காவிளை, கொல்லங்கோடு பகுதி தனியார் தங்கும் விடுதிகளில் அமைக்கப்பட்ட தனிமை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

கரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் காரணமாக மாலத்தீவுகளில் சிக்கித்  தவித்துவந்த இந்தியர்கள் 698 பேர் இந்திய கடற்படை கப்பல் மூலமாக ஞாயிற்றுக்கிழமை கேரள மாநிலம் கொச்சி வந்தடைந்தனர்.  

அவர்களில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் உள்பட 57 பேர் களியக்காவிளை தனியார் தங்கும் விடுதியிலும்,  30 நபர்கள் கொல்லங்கோடு தனியார் விடுதியிலும் தங்க வைக்கப்பட்டு, சுகாதாரத் துறை அதிகாரிகளின் கண்காணிப்பிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com