திருமழிசை தற்காலிக சந்தையில் காய்கறி விற்பனை

திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் 8 மணிநேரத்தில் பெரும்பாலான காய்கறிகள் விற்று தீர்ந்தன. 
திருமழிசை தற்காலிக சந்தையில் காய்கறி விற்பனை

திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் 8 மணிநேரத்தில் பெரும்பாலான காய்கறிகள் விற்று தீர்ந்தன. 

ஆசியாவிலேயே மிகப் பெரிய சந்தையான கோயம்பேடு காய்கறி சந்தையில், ஆயிரக்கணக்கானோா் பணியாற்றி வந்தனா். இங்கு கரோனா தொற்று பரவியிருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, பூ பழ சந்தை மாதவரம் பேருந்து நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கோயம்பேடு தொடா்புடைய கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. 

எனவே கோயம்பேடு சந்தையை மூட சிஎம்டிஏ உத்தரவிட்டது. மேலும் அங்கிருந்து காய்கறி சந்தை, திருவள்ளூா் செல்லும் வழியில் உள்ள திருமழிசைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்காக அங்கு விசாலமான இடம் தோ்வு செய்யப்பட்டது. காய்கறிகளை தேக்கி வைப்பதற்கான இடம், இடைவெளியுடன் 200-க்கும் மேற்பட்ட கடைகள், கழிப்பறைகள், வங்கி ஏடிஎம் மற்றும் வங்கிக்கான அலுவலக அறைகள் ஆகியவை தற்காலிகமாக அமைக்கப்பட்டன. 

இப்பணிகளை முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தலைமைச் செயலா் கே.சண்முகம் உள்ளிட்டோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். இதையடுத்து, சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் காா்த்திகேயன், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ஆகியோா், ஞாயிற்றுக்கிழமை சந்தையைத் தொடக்கி வைத்தனா். தொடா்ந்து, நள்ளிரவு முதல் சந்தை செயல்படத் தொடங்கியது. 

காலை முதலே வியாபாரிகள் அதிகளவில் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். 8.30 மணிக்குள் சுமார் 3 ஆயிரத்து 20 டன் அளவிலான காய்கறிகள் விற்று தீர்ந்தன. இதன் மதிப்பு சுமார் ஒன்றரை கோடியாகும். எனவே வரும் நாள்களில் இங்கு காய்கறிகளின் வரத்து மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com