
செல்லாத பாஸ்டேக் வில்லைகளைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு, இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகளில் திருத்தம் செய்து, மே 15-ஆம் தேதி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, பாஸ்டேக் வில்லைகள் ஒட்டாத, செல்லத்தகுந்த பாஸ்டேக் இல்லாத அல்லது செயல்படாத நிலையில் உள்ள பாஸ்டேக்குடன், சுங்கச்சாவடியில் பாஸ்டேக் வாகனங்களுக்கான பாதையில் நுழைந்தால், அந்த வாகனத்துக்கான இயல்பு கட்டணத்தைவிட, இரு மடங்கு கட்டணம் வசூலிக்க இதில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு மட்டும், பாஸ்டேக் பாதையில் நுழைந்தால் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.