குறுங்காடு வளர்ப்புத் திட்டம் துவக்கம்

நன்னிலம் அருகிலுள்ள அதாம்பார் கிராமத்தில் மியாவாக்கி முறையில் 'குறுங்காடு' வளர்ப்புத் திட்டம் செவ்வாய்க்கிழமை துவங்கப்பட்டது.
அதம்பார் கிராமத்தில் மரம் நடு விழா
அதம்பார் கிராமத்தில் மரம் நடு விழா

நன்னிலம் அருகிலுள்ள அதாம்பார் கிராமத்தில் மியாவாக்கி முறையில் 'குறுங்காடு' வளர்ப்புத் திட்டம் செவ்வாய்க்கிழமை துவங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகிலுள்ள அதம்பார் கிராமத்திலுள்ள சிவன் கோவில் வளாகத்தில் மழைத்துளி உயிர்த்துளி என்ற இளைஞர்கள் அமைப்பும், பாண்டிச்சேரி பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சமூக அமைப்பும் இணைந்து மியாவாக்கி குறுங்காடு அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதம்பார்  கிராமத்தில் உள்ள சிவன் கோவில் வளாகத்தில் 1500 சதுர அடி பரப்பில் 23 வகையான 500 நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வீரராகவன் மற்றும் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இரண்டாவது  மியாவாக்கி குறுங்காடு அமைக்கும்  நிகழ்ச்சியில் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சமூக அமைப்பைச் சேர்ந்த ஆனந்தன் மற்றும் அவரது குழுவினர், ஊராட்சி மன்றத் தலைவர் வைத்தியநாதன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். மியாவாக்கி காடுகள் வளர்க்கும் முறையைப் பற்றி இக்குழுவைச் சேர்ந்த ஆனந்தன் தெரிவித்ததாவது, 

மியாவாக்கி முறையால் குறுகிய நாட்களில் மரக்கன்றுகள் வளர்ந்து காடுகளாக காட்சியளிக்கும். குறுகிய காலத்தில் மரம் வளர்வதற்காக, கடந்த 10 நாட்களாக மண்ணைப் பதப்படுத்தி, அம்மனுடன் செம்மண், மாட்டுச்சாணம், இயற்கை உரம், தேங்காய் நார்  ஆகியவற்றைக் கலந்து மண்ணை வளப்படுத்தி உள்ளோம்.

இந்த காடுகள் அமைந்துள்ள பகுதியினை சுற்றி ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு அதிகபட்சமான மழை அளவு கிடைக்கும். இந்த மரம் வளர்ப்பு முறையை பொதுமக்களிடம் ஆர்வத்துடன் கொண்டு செல்வதற்காக அவரவர் நட்சத்திரப்படி மரம் வளர்க்கும் முறையினையும் அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com