சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ததைக் கண்டித்து சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ததைக் கண்டித்து சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக விவசாயிகள், நெசவாளர்கள், குடிசை வாசிகள் உள்ளிட்ட ஏழை, எளிய மக்கள் அனுபவித்து வருகிற இலவச மின்சாரத்தைப் பறிக்கும் மத்திய அரசையும், அதைத் தடுத்து நிறுத்த துணிவற்ற மாநில அரசையும் கண்டித்து சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு, சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள இந்தியன் வங்கி முன்பு, பாரத ஸ்டேட் வங்கி முன்பு, நகராட்சி அலுவலகம் முன்பு, மின்சார அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 5 பேருக்கு மிகாமல் முகக்கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளி கடைப்பிடித்து கையில் கருப்புக்கொடி ஏந்தி  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.பாலதண்டாயுதம் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பிபிகே.சித்தார்த்தன், மாநிலத் துணைத் தலைவர் செந்தில்குமார், மாநில எஸ்சி எஸ்டி பிரிவு துணைத் தலைவர் செந்தமிழ்ச்செல்வன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தவர்த்தான்பட்டு விஸ்வநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாநில விவசாய அணி செயலாளர் வினோபா, ஸ்டீபன், மாவட்ட துணை தலைவர் குமார், மாவட்ட எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவர் பழனிசாமி, மாவட்ட சிறுபான்மை துறை தலைவர்  ஷாஜகான், மாவட்ட மனித உரிமை துறை தலைவர் சகஜானந்தா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சைய்து மிஸ்கின், மாவட்ட பொதுச் செயலாளர்கள் வல்லம் படுகை கணேசன், சின்னத்தம்பி என்கிற சண்முகசுந்தரம், கட்டாரி சந்திரசேகர், சி.பி.ரத்தினம், நகரச் செயலாளர்கள் ராஜரத்தினம், ராஜேந்திரன், இதயத்துல்லா, கே. என். சாமி, நடராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com