
காய்கறிகள், பழங்கள் விற்பனை நிலையத்தை ஐந்து நகரங்களில் அமைப்பதற்கான பணிகளை தோட்டக்கலைத் துறை தொடங்கியுள்ளது.
பொது முடக்கத்தில் முடங்கிய மக்களின் வசதிக்காக தோட்டக்கலைத் துறை மூலமாக காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டன. சென்னையில் ‘ஆன்லைன்’ வாயிலாக விற்பனை நடந்தது. இந்தத் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. எனவே, இந்த திட்டத்தை மேலும் சில நகரங்களில் தொடர அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
தற்போது, முக்கிய நகரங்களில், காய்கறிகள், பழங்களை விற்பனை செய்யும் குளிா்பதன வசதி செய்யப்பட்ட தனியாா் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோன்று, சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை ஆகிய ஐந்து நகரங்களில் தோட்டக்கலைத் துறையினா் விற்பனை நிலையத்தை அமைக்கவுள்ளனா். ஒவ்வொரு விற்பனை நிலையமும், 3,000 சதுர அடி பரப்பளவிலான கட்டடத்தில் அமையவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...