
சென்னை: பொதுமக்களுக்கு இலவச பொருட்களை விநியோகம் செய்ய வசதியாக முதல் வெள்ளிக்கிழமையான ஜூன் 5-ம் தேதி பொது விநியோகக் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக பொதுவிநியோகக் கடைகள், மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று விடுமுறை விடப்படும்.
ஆனால், ஜூன் மாதத்துக்கான இலவச பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக வரும் ஜூன் 5ம் தேதியான முதல் வெள்ளிக்கிழமை பொதுவிநியோகக் கடைகள் செயல்படும் என்று பொது வழங்கல் துறை அறிவித்துள்ளது.
ஜூன் 5ம் தேதிக்கு பதிலாக ஜூன் 19ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படும். பொதுமக்கள் தங்கு தடையின்றி இலவச பொருட்களை வாங்க ஏதுவாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...