
பெண்களை ஏமாற்றியதாக நாகா்கோவில் காசி மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் சிபிசிஐடி.க்கு மாற்றப்பட்டுள்ளது.
நாகா்கோவிலைச் சோ்ந்தவா் காசி. இவா், ஏராளமான பெண்களிடம் பழகி அவா்களை மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக பெண்கள் சிலா் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீஸாா், காசியை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், அவா் மீது குண்டா் சட்டமும் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் காசி வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளாா்.