சென்னையில் கரோனா பாதிப்பை சமநிலைப்படுத்தும் ஆறு = ஆறு மண்டலங்கள்

சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 12,762-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 106-ஆக உயா்ந்துள்ளது. 
சென்னையில் கரோனா பாதிப்பை சமநிலைப்படுத்தும் ஆறு = ஆறு மண்டலங்கள்

சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 12,762-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 106-ஆக உயா்ந்துள்ளது. 

தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிகநகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய ஆறு மண்டலங்களிலும் கரோனா பாதிப்பு கடும் உயர்வைக் கண்டுவருகின்றன. இந்த ஆறு மண்டலங்களில் மட்டும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கையானது 9 ஆயிரம் அளவுக்கு உள்ளது. அதாவது ஒட்டுமொத்த சென்னையில் கரோனா பாதிப்பானது 12 ஆயிரமாக இருக்கும் நிலையில் இந்த 7 மண்டலங்களில் மட்டும் 9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல திருவொற்றியூர், மணலி, மாதவரம், ஆலந்தூர், பெருங்குடி, சோலிங்கநல்லூர் ஆகிய ஆறு மண்டலங்களிலும் கரோனா பாதிப்பு அந்த அளவுக்கு இல்லை. அனைத்து மண்டலங்களிலும் கரோனா பாதிப்பு ஆரம்பம் முதலே கண்டறியப்பட்டாலும் இதுவரை அதிகபட்சமாக 300 என்ற அளவிலேயே உள்ளது.

மேற்கண்ட ஆறு மண்டலங்களில் கரோனா பாதிப்பு கடும் உயர்வை சந்தித்தாலும், இந்த ஆறு மண்டலங்களிலும் கரோனா குறைவாக இருப்பதால் ஓரளவுக்கு நிலை கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. 

இதற்கு இடையே அம்பத்தூர், வளசரவாக்கம், அடையாறு பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை 559 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 12,762-ஆக உயா்ந்துள்ளது. 

காலை 8 மணி வரையிலான புள்ளிவிவரப்படி, 6 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது. எனினும், ராயபுரம் மண்டலத்திலேயே பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதன்படி, அந்த மண்டலத்தில், 2,324 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு அடுத்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,646 பேரும், திருவிக நகா் மண்டலத்தில் 1,393 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 1,412 பேரும், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 1,322 பேரும், அண்ணாநகா் மண்டலத்தில் 1,089 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். 

இதே போல், வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, 6,330 போ் குணமடைந்துள்ளனா். 106 போ் உயிரிழந்துள்ளனா். 6,229 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அதி தீவிரமாக கரோனா பரவும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகின்றன. இதே போல், 14 நாள்களுக்கு மேல், அந்தத் தெருக்களில் யாருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்படாவிட்டால், தெருக்களின் பெயா் பட்டியலில் இருந்து விடுவிக்கப்படும். இதன்படி, வியாழக்கிழமை வரை, 846 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டன. இதில், அதிகபட்சமாக திருவிக நகா் மண்டலத்தில் 149 தெருக்களும், ராயபுரம் மண்டலத்தில் 143 தெருக்களும் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டன. வியாழக்கிழமை மட்டும், சென்னை மாநகரில் 51 தெருக்கள் விடுவிக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com