

நவம்பர் 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, திரையரங்க வளாகத்திற்குள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
முகக்கவசம் அணியாதவர்களை திரையரங்கினுள் அனுமதிக்கக்கூடாது.
திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப அனுமதி.
திரையரங்கு வளாகத்திலும், வெளியேயும் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்.
திரையரங்குகளின் நுழைவாயிலில் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து வரிசையில் வரும் வகையில் குறியீடுகள் போட வேண்டும்.
திரைப்படத்தின் இடைவெளியின்போது பார்வையாளர்கள் வெளியே வருவதைத் தவிர்க்க ஊக்குவிக்க வேண்டும்.
ஒவ்வொரு திரைப்படக் காட்சிக்கும் இடையே போதுமான கால இடைவெளி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.