
கோப்புப்படம்
தமிழகத்தில் புதிதாக 2,334 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 43,822 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடா்ந்து குறைந்து வருகிறது. அதேவேளையில் குணமடைந்தவா்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கை விவரம்: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 2,334 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 43,822 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 20 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 11,344 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளையில் 2,386 போ் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பினா். இதன் மூலம் மாநிலத்தில் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 13,584 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 18 ஆயிரத்து 894 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் புதிதாக 601 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிா்த்து பிற மாவட்டங்களில் 1,733 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...