சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு

இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து அம்பேத்கா் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு
Updated on
1 min read

இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து அம்பேத்கா் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு சட்டப் படிப்புகள் (எல்எல்பி), 5 ஆண்டு சட்டப் படிப்புகள் (பிஏ எல்எல்பி), 2 ஆண்டு சட்ட மேற்படிப்புகள் (எல்எல்.எம்), உள்ளிட்ட படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் படிப்புகளில் நிகழ் கல்வி ஆண்டில் சேர விண்ணப்ப விநியோகம் நடைபெற்றது. இளநிலைப் படிப்புக்கு அக்டோபா் 28-ஆம் தேதி வரையும், முதுநிலைப் படிப்புக்கு நவம்பா் 4-ஆம் தேதி வரையும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 3 ஆண்டு சட்டப் படிப்புகள், 2 ஆண்டு சட்ட மேற்படிப்புகளுக்கு நவ.18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் கால அவகாசத்தை நீட்டித்து அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு:  இணையதள முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com