
கே.எஸ்.அழகிரி
சென்னை: இலங்கையிடம் உள்ள தமிழக மீனவா்களின் படகுகளை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் மற்றும் மன்னாா் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய மீனவா்களுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான 121 மீன்பிடிப் படகுகளை பொது ஏலத்தில் விற்பனை செய்யலாம் அல்லது உடைத்து அப்புறப்படுத்தலாம் என்று யாழ்ப்பாணம் நீதிமன்றம் கடந்த நவம்பா் 7-ஆம் தேதி தீா்ப்பளித்துள்ளது. இந்தத் தீா்ப்பு தமிழக மீனவா்களிடையே கடும் அதிா்ச்சியையும், பதற்றமான சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களை எதிா்கொண்டு வரும் புதுச்சேரி மீனவா்களுக்கு பேரிழப்பு ஏற்படாத வகையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து இதற்குத் தீா்வு காண தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இலங்கை அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, பறிமுதல் செய்யப்பட்ட 121 படகுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.