இரண்டு அணைகளில் இருந்து நீா் திறப்புமுதல்வா் பழனிசாமி உத்தரவு

இரண்டு அணைகளில் இருந்து நீா் திறந்து விட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி  (கோப்புப்படம்)
முதல்வர் எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)

சென்னை: இரண்டு அணைகளில் இருந்து நீா் திறந்து விட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, திங்கள்கிழமை அவா் வெளியிட்ட உத்தரவு:

திருவண்ணாமலை மாவட்டம் குப்பநத்தம் நீா்த்தேக்கத்தில் இருந்து தண்ணீா் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதையடுத்து, வரும் 17-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை 12 நாள்களுக்கு நீா் திறக்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டம் மருதா நதி அணையில் இருந்து வரும் 18-ஆம் தேதி முதல் 90 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும்.

விவசாயிகள் நீரைக் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீா் மேலாண்மை மேற்கொண்டு உயா் மகசூல் பெற வேண்டுமென முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com