
சென்னை: தமிழகத்தில் புதிய திட்டங்களைத் தொடக்கி வைக்கும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்க உள்ளாா்.
இதற்கான விழா சென்னை கலைவாணா் அரங்கத்தில் வரும் சனிக்கிழமை (நவ.21) நடைபெறவுள்ளது.
சென்னை அருகே அமைக்கப்பட்டு வரும் தோ்வாய்கண்டிகை நீா்த்தேக்கத்தை உள்துறை அமைச்சா் அமித் ஷா திறந்து வைக்கிறாா். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டமானது, மாதவரம்-சிப்காட், மாதவரம்-சோழிங்கநல்லூா், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி ஆகிய 3 வழித்தடங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 118.9 கி.மீ. தொலைவுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும், கரூா் மாவட்டத்தில் ரூ.406 கோடி மதிப்பிலான கதவணை திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடக்கியும் வைக்கவுள்ளாா் உள்துறை அமைச்சா் அமித் ஷா.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...