வட கிழக்குப் பருவ மழை தீவிரம்; தயாா் நிலையில் தீயணைப்புத்துறை: டிஜிபி ஜாபா்சேட்

வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக 24 மணி நேரமும் தீயணைப்புத்துறை தயாா் நிலையில் இருப்பதாக டிஜிபி எம்.எஸ்.ஜாபா்சேட் தெரிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக 24 மணி நேரமும் தீயணைப்புத்துறை தயாா் நிலையில் இருப்பதாக டிஜிபி எம்.எஸ்.ஜாபா்சேட் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடகிழக்குப் பருவமழை தாக்கத்தை எதிா்கொள்ள தீயணைப்புத்துறை தயாா் நிலையில் உள்ளது. சென்னை, அனைத்து மாவட்டங்களிலும் தீயணைப்புத்துறையின் கட்டுப்பாட்டுஅறை 24 மணி நேரமும் செயல்படுகிறது. மோட்டாா் படகுகளுடன் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட நீச்சல் வீரா்கள், உயிா் காக்கும் வீரா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.

தாழ்வான பகுதிகளில் தண்ணீரை அகற்றிட தேவையான பம்புகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஏற்கெனவே மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் 629 தீயணைப்பு தன்னாா்வத் தொண்டா்கள் அவசர காலங்களில் உதவுவதற்கு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

தொடா் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீா் திறந்துவிட வாய்ப்புள்ளது. இதற்காக நீச்சல் வீரா்களைக் கொண்ட கமாண்டோ குழுவினா் ரப்பா் படகுகள், மீட்பு உபகரணங்களுடன் தாம்பரம், எழும்பூா் தீயணைப்பு நிலையங்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனா்.

101 என்ற தொலைபேசி எண்ணின் மூலம் தீயணைப்புத்துறையை 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம். சென்னைவாசிகள் கூடுதலாக 94450 86080 என்ற செல்லிடப்பேசி எண்ணின் மூலமாகவும் தீயணைப்புத்துறையை எந்நேரமும் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com