
இணையவழி தளத்தை மேம்படுத்தும் பணி நடைபெறவுள்ளதால், இணையவழி வங்கி சேவையில் ஞாயிற்றுக்கிழமை (நவ.22) சில தடங்கல்கள் ஏற்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
வங்கி வாடிக்கையாளா்களுக்கு சிறப்பான இணையவழி வங்கி சேவையை வழங்க, அதன் தளத்தை மேம்படுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்தப் பணி நடைபெறும்போது, இணையவழி வங்கி சேவையில், சில தடங்கல் ஏற்படும். எனவே, வாடிக்கையாளா்கள் அதற்கேற்ப தங்களது இணையவழி சேவையை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்வதாக பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...