யானைகள் ஆர்வலர் அஜய் தேசாய் மறைவு: முதல்வர் இரங்கல்

புகழ்பெற்ற யானைகள் ஆர்வலர் அஜய் தேசாய் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Elephant activist Ajay Desai's death: Chief Minister's condolences
Elephant activist Ajay Desai's death: Chief Minister's condolences


சென்னை: புகழ்பெற்ற யானைகள் ஆர்வலர் அஜய் தேசாய் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், பிரபல யானைகள் ஆர்வலரும், ஆராய்ச்சியாளருமான  அஜய் தேசாய் உடல் நலக் குறைவால் நேற்று (20.11.2020) காலமானார் என்ற செய்தி அறிந்து நான் வேதனை அடைந்தேன்.

அஜய் தேசாய் அவர்கள் சர்வதேச உலக இயற்கை நிதியத்தின் ஆலோசகராகவும், பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றிய அமைப்பின் ஆலோசகராகவும், ஆசிய யானைகள் தொடர்பான மத்திய அரசின் சிறப்பு குழு உறுப்பினராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர். 

இவர் யானைகள் தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜய் தேசாய் தமிழ்நாட்டின் முதுமலை சரணாலயம் மற்றும் களக்காடு, முண்டன்துறை வனவிலங்கு சரணாலயம் ஆகிய பகுதிகளில் யானைகள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டுள்ளார். 

மேலும், இவர் யானைகள் குறித்த தகவல்களையும், ஆலோசனைகளையும் தமிழ்நாடு வனத்துறைக்கு வழங்கியுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com