ரயில்வே துறை கட்டமைப்பை நவீனப்படுத்த 5 ஆண்டுகளில் ரூ.13.5 லட்சம் கோடி முதலீடு

ரயில்வே துறை கட்டமைப்பை நவீனப்படுத்துவதற்காக, அடுத்த 5 ஆண்டுகளில் தேசிய உள்கட்டமைப்பு நிதியில் இருந்து ரூ.13.5 லட்சம் கோடி ரூபாய்

ரயில்வே துறை கட்டமைப்பை நவீனப்படுத்துவதற்காக, அடுத்த 5 ஆண்டுகளில் தேசிய உள்கட்டமைப்பு நிதியில் இருந்து ரூ.13.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது என்று ரயில்வே வாரியத்தின் உள்கட்டமைப்பு பிரிவு உறுப்பினா் பிரதீப் குமாா் தெரிவித்தாா்.

தெற்கு ரயில்வே சாா்பில், ரயில்வே துறையில் பயன்படுத்தப்படும் சமீபத்திய தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம் இணையவழி வாயிலாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற ரயில்வே வாரியத்தின் சிக்னல் மற்றும் தொலைத்தொடா்புப் பிரிவு உறுப்பினா் பிரதீப்குமாா் பேசியது:

ரயில்வே துறை கட்டமைப்பை நவீனப்படுத்துவதற்காக, அடுத்த 5 ஆண்டுகளில், தேசிய கட்டமைப்பு நிதியிலிருந்து ரூ.13.5 கோடி முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

சொத்துகளைப் பராமரிப்பதில் உள்ள சுமையைக் குறைக்க, பராமரிப்பு செயல்களை தானியங்கு முறையில் செயல்படுத்துவதில், செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு வகிக்கும். முன்னோடி திட்டமாக, நாடு முழுவதும் உள்ள 100 ரயில் நிலையங்களில் சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு சொத்துகள், செயற்கை நுண்ணறிவு வாயிலாக பராமரிக்கப்படுகின்றன.

இதில், தெற்கு ரயில்வேயில் கொருக்குப்பேட்டை, திருவொற்றியூா், எண்ணுாா், ஆவடி, கடம்பத்துாா் உள்பட 10 ரயில் நிலையங்கள் அடங்கும் என்றாா் அவா்.

கருத்தரங்கில், தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ், கூடுதல் உறுப்பினா் அன்சுல் குப்தா, சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு முதன்மை தலைமை அதிகாரி பாஸ்கரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com