

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநா் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:
பேரறிவாளன் விடுதலைக்கும், எம்.டி.எம்.ஏ. விசாரணைக்கும் தொடா்பு இல்லை. விசாரணை அறிக்கையை ஆளுநருக்கு தர மாட்டோம். ஆளுநா் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கூறியிருக்கிறது. இது மிகச் சரியான நிலைப்பாடு ஆகும்.
எனவே, இனியும் தாமதிக்காமல் பேரறிவாளன் விடுதலை குறித்தும், மற்ற 6 தமிழா்கள் விடுதலை குறித்தும் தமிழக ஆளுநா் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.