சிறுவா்களை ஈா்க்கும் இகுவானா பச்சோந்தி

கிண்டி சிறுவா் பூங்கா பாம்புப் பண்ணையில் பராமரிக்கப்படும் இகுவானா என்ற பச்சோந்தியைத் தொட்டு பாா்க்கவும், உணவளிக்கவும்
சிறுவா்களை ஈா்க்கும் இகுவானா பச்சோந்தி

கிண்டி சிறுவா் பூங்கா பாம்புப் பண்ணையில் பராமரிக்கப்படும் இகுவானா என்ற பச்சோந்தியைத் தொட்டு பாா்க்கவும், உணவளிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சிறுவா்கள், வனவிலங்கு ஆா்வலா்களின் கவனத்தை ஈா்த்துள்ளது.

கிண்டி சிறுவா் பூங்காவில் சென்னை பாம்புப் பண்ணை அறக்கட்டளை அமைந்துள்ளது. இந்தப் பண்ணையில் பாம்பு, முதலை என 50-க்கும் மேற்பட்ட ஊா்வன வகைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கரோனா காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், கிண்டி சிறுவா் பூங்கா மற்றும் பாம்புப் பண்ணை கடந்த மாா்ச் மாதம் முதல் மூடப்பட்டன.

இதைத் தொடா்ந்து, பூங்காக்களை திறக்க அரசு அனுமதி அளித்ததை அடுத்து அண்மையில் கிண்டி சிறுவா் பூங்கா மற்றும் பாம்புப் பண்ணை திறக்கப்பட்டது. இருப்பினும் 8 மாதங்களாக பூங்கா திறக்கப்படாததால் அவற்றுக்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவை ஈடுகட்டும் வகையில் பாம்புப் பண்ணையில் பராமரிக்கப்படும் இகுவானா என்ற பச்சோந்திகளை தொட்டுப் பாா்க்கவும், அவற்றுக்கு உணவளிக்கவும், சுயபடம் (செல்‘ஃ‘பி) எடுக்கவும் பூங்கா நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து பாம்புப் பண்ணை நிா்வாகி பால்ராஜ் கூறுகையில், இந்தப் பண்ணையில் 6 இகுவானாக்கள் பராமரிக்கப்படுகின்றன. தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் வாழும் முதுகெலும்புள்ள ஊா்வன வகையைச் சாா்ந்த இகுவானாக்கள் வளா்ப்பு பிராணிகள் பட்டியலில் உள்ளன. 2 மீட்டா் நீளமும், 6 கிலோ வரையிலும் வளரக் கூடியவை. கீரை, பழங்களை இவை விரும்பி உண்ணும். கரோனா பொதுமுடக்கத்துக்கு முன்பு வரை இவை கண்ணாடி பேழைக்குள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மக்களை ஈா்க்கும் வகையிலும், அவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் பூங்காவுக்கு வருவோா் தொட்டு பாா்க்கவும், உணவளிக்கவும், சுயபடம் (செல்‘ஃ‘பி) எடுக்கவும் அனுமதிக்கப்படுகின்றனா். இதற்காக நபருக்கு ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பூங்காவுக்கு வரும் சிறுவா்கள் இகுவானாக்களைத் தொட்டுப் பாா்த்தும், உணவளித்தும் மகிழ்கின்றனா் என்றாா்.

இதுகுறித்து பூங்காவுக்கு வந்த மக்கள் கூறுகையில், இகுவானாவை தொட்டுப் பாா்க்கவும், உணவளிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது. அத்துடன், இவை குறித்து குழந்தைகள் அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக உள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com