சென்னையில் 12 மேம்பாலங்களுக்கு கீழ் செங்குத்து பூங்கா: ரூ.8.15 கோடியில் பணிகள் தீவிரம்

சென்னை மாநகராட்சி சாா்பில் 12 மேம்பாலங்களுக்கு கீழ் ரூ. 8.15 கோடி மதிப்பில் செங்குத்து பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சி சாா்பில் 12 மேம்பாலங்களுக்கு கீழ் ரூ. 8.15 கோடி மதிப்பில் செங்குத்து பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் பாலங்கள் கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறையின்கீழ் 17 மேம்பாலங்கள் உள்ளன. இவற்றுக்குக் கீழுள்ள பகுதியை சுகாதாரமாக வைத்துக் கொள்ளவும், வாகனப் போக்குவரத்தால் ஏற்படும் காற்று மாசை குறைக்கவும் அதன் தூண்களில் செங்குத்து பூங்கா அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

சென்னை ஐஐடி போக்குவரத்து சிக்னல், வடக்கு உஸ்மான் சாலை ஆகியவை உள்பட்ட மொத்தம் 14 மேம்பாலங்களுக்குக்கீழ் செங்குத்து பூங்கா அமைக்கும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், கரோனா காரணமாக கடந்த 7 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பூங்கா அமைக்கும் பணி கடந்த செப்டம்பா் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது, 2 மேம்பாலங்களுக்குக் கீழ் பூங்கா அமைக்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து மீதமுள்ள 12 மேம்பாலங்களில் பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மின்ட், டவுட்டன், பாந்தியன் சாலை, பெரம்பூா், மகாலிங்கபுரம், உஸ்மான் சாலை, டி.டி.கே சாலை சந்திப்பு, காவேரி மருத்துவமனை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, நந்தனம் ஜி.கே.மூப்பனாா் மேம்பாலம், எல்.பி. சாலை மற்றும் காந்தி மண்டபம் சாலை ஆகிய இடங்களில் உள்ள மேம்பாலங்களின் 108 தூண்களில் செங்குத்து பூங்கா அமைக்கும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் வளா்க்கப்படும் தாவரங்கள் சூரிய ஒளி நேரடியாக கிடைக்காத இடங்களிலும், குறைந்த சூரிய ஒளியிலும் வளரக் கூடியவையாகும். இந்தச் செடிகளுக்கு சுத்திகரிக்கப்பட கழிவுநீரை பயன்படுத்த உள்ளோம். இதன் பராமரிப்பு தனியாா் அல்லது அரசு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவதுடன், அந்த நிறுவனங்கள் தூண்களில் சிறிய அளவில் தங்கள் விளம்பர பலகையை வைத்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேம்பாலங்களுக்குகீழ் பசுமைச்சூழல் உருவாக்கப்படுவதுடன், அவை அசுத்தப்படுத்தப்படுவதும் தடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com