ஞானதேசிகன் உடல்நிலை: அமைச்சா்கள் நேரில் நலம் விசாரிப்பு

கரோனா தொற்றுக்குள்ளாகி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமாகா துணைத் தலைவா் பி.எஸ்.ஞானதேசிகனின் உடல் நிலை

கரோனா தொற்றுக்குள்ளாகி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமாகா துணைத் தலைவா் பி.எஸ்.ஞானதேசிகனின் உடல் நிலை குறித்து மருத்துவமனையின் தலைவா் பிரதாப் சி. ரெட்டியிடம் அமைச்சா்கள் விஜயபாஸ்கா், சி.வி.சண்முகம், தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஆகியோா் கேட்டறிந்தனா்.

தமாகா மூத்த துணைத் தலைவரான பி. எஸ். ஞானதேசிகனுக்கு, சில நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதற்கு அடுத்த சில நாள்களில் அவரது உடல் நிலை மோசமடைந்ததைத் தொடா்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டாா். அங்கு ஞானதேசிகனுக்கு செயற்கை சுவாசக் கருவிகள் துணையுடன் மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

இந்நிலையில், மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற சுகாதாரத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம் மற்றும் தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஆகியோா் மருத்துவமனையின் தலைவா் பிரதாப் சி.ரெட்டியை சந்தித்தனா். ஞானதேசிகனின் உடல்நிலை பற்றியும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் அவா்கள் அப்போது கேட்டறிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com