
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவிடத்தில் டிஜிட்டல் காட்சி அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான திட்ட மதிப்பு ரூ.11.84 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. நினைவிடத்தில் டிஜிட்டல் காட்சி அமைப்பு உள்ளிட்ட இதர வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை மூன்று மாதங்களில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. திட்ட மதிப்பு ரூ.11.84 கோடியாகும். இந்தப் புதிய வசதியை முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த தினத்துக்கு முன்பாக முடிக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...