சிவாஜி கணேசன் பிறந்தநாள்: துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள் மரியாதை

சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
சிவாஜி கணேசன் பிறந்தநாள்: துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள் மரியாதை
சிவாஜி கணேசன் பிறந்தநாள்: துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள் மரியாதை

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 93ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அடையாரில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தமிழக அரசு, தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது பிறந்த நாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 1ஆம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், சென்னை, அடையாரில் அமைந்துள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு இன்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்,  ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவர் பா. வளர்மதி கலந்துகொண்டு தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தினர் நடிகர் ராம்குமார், விக்ரம் பிரபு, ஆர்.ஜி.துஷ்யந்த் ஆகியோரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அன்னாரின் வாழ்க்கை வரலாற்று புகைப்படக் கண்காட்சியை துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com