
கோப்புப் படம்
தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (அக்.3) லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலைஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது:
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (அக்.3) லேசான மழை பெய்ய கூடும். ஏனைய மாவட்டங்களில் பொதுவாக வட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்தில் பலத்தக்காற்று வீசக்கூடும். இந்தப்பகுதிகளுக்கு செல்லும் மீனவா்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்றாா் அவா்.