
மானாமதுரை அரசு மருத்துவமனையில் 30 ஆண்டுகள் பழமையான மரம் சாய்ந்து விழுந்தது.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனையில் 30 ஆண்டுகள் பழமையான மரம் சனிக்கிழமை சாய்ந்தது.
மானாமதுரை வட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நுழைவு வாயில் பகுதியில் பிரசவ வார்டு கட்டிடத்தின் அருகே மிகவும் பழமையான மரம் இருந்தது. அடந்து வளர்ந்திருந்த இந்த மரம் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். வெயில் காலங்களில் இந்த மரம் பல மீட்டர் தூரத்துக்கு நிழல் கொடுத்து வந்தது.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள் இந்த மரத்தின் நிழலில் உட்கார்ந்து வெயில் நேரத்தில் நிழலின் அருமையை அனுபவிப்பார்கள்.
இந்நிலையில், திடீரென இந்த மரம் சாய்ந்து விழுந்தது. மரத்தின் அடிப்பகுதி .சேதமடைந்திருந்ததால் சாய்ந்து விழுந்தது தெரியவந்தது. மரம் சாய்ந்ததால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள் கவலையடைந்தனர்.
பல வருடங்களாக பறவை இனங்கள் வாழ்வதற்கும் பொதுமக்கள் இளைப்பாருவதற்கும் நிழல் கொடுத்து வந்த இந்த மரம் சாய்ந்தது மிகவும் கவலையளிப்பதாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தெரிவித்தனர்.
மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சாய்ந்த மரம் வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G