மின்சாரம் தாக்கி பலியான 14 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அறிவித்தார் முதல்வர்

தமிழகத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மின்சாரம் தாக்கி பலியான 14 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அறிவித்தார் முதல்வர்
மின்சாரம் தாக்கி பலியான 14 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அறிவித்தார் முதல்வர்

தமிழகத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த பகவதி நாடார் மகன் ராமையா மின்கம்பத்தின் பக்கவாட்டு கம்பியை எதிர்பாராத விதமாக பிடித்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

அகஸ்தீஸ்வரம் வட்டம், தென்தாமரைகுளம் கிராமத்தைச் சேர்ந்த தங்கநாடார் மகன் நந்தகுமார் தெருவிளக்கு சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவாலா கிராமத்தைச் சேர்ந்த மார்க்கண்டன் மனைவி விஜயலட்சுமி எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், பூவற்றக்குடி சரகம், வடக்கு கிராமத்தைச் சேர்ந்த மெய்யப்பன் மகன்  ஜெய்சங்கர் மின்மாற்றியில் எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கறம்பக்குடி வட்டம், தென்மழையூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்கிற ராமையா மகன் கருப்பையா எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பெரியபாபுசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி  மனைவி சரோஜா புல் அறுக்க சென்ற இடத்தில், அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், மருங்காபுரி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் விமல்காந்த் எதிர்பாராத விதமாக மின் கம்பத்தை தொட்ட போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், கோட்டைபட்டி மின்பகிர்மான அலுவலகத்தில் கம்பியாளராகப் பணியாற்றி வந்த ஆண்டி மகன் ரெங்கநாதன் மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், தெள்ளூர் மதுரா வீராரெட்டி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி மகன்  மதியழகன் தனது வீட்டினை சரிசெய்ய முற்பட்ட போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், வடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ருக்மணி கணவர் பார்த்தீபன் இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்ற போது எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், பாலி கிராமத்தைச் சேர்ந்த அருள்தாஸ் மனைவி மங்கள நாயகி  மேல் எதிர்பாராத விதமாக மின்கம்பி அறுந்து விழுந்து உயிரிழந்தார். கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டம், கீரணத்தம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ராம்பிரசாத் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

கோயம்புத்தூர் வடக்கு வட்டம், கவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியநாதன் மகன் சவுரிராஜ் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் வட்டம், ஆதியூர் மதுரா வினாயகபுரத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் வெங்கடேசன் எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 நபர்களின் குடும்பங்களுக்கு  ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 14 நபர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com