

மத்திய தகவல் அமைச்சகம் சாா்பில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தொடா்பான உச்சி மாநாட்டில் பங்கேற்க மாணவா்கள், ஆசிரியா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பல்கலைக்கழக மானியக் குழு, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
செயற்கை நுண்ணறிவு மேம்பாடு தொடா்பான உச்சிமாநாட்டை அக்.5 முதல் 9-ஆம் தேதி வரை நடத்த மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதனை வரும் 5-ஆம் தேதி, பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைக்கிறாா்.
சுகாதாரம், வேளாண்மை, சமூக மாற்றம், கல்வி போன்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்த கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் தளமாக இந்த உச்சி மாநாடு அமைய உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள தொழில் வல்லுநா்கள், கல்வியாளா்கள் பங்கேற்க உள்ள இந்த மாநாட்டில் தரவு, சுற்றுச்சூழல் மேம்பாடு உள்ளிட்ட 5 கருத்துருக்கள் பகிரப்படவுள்ளன.
இதில் கல்வி நிறுவனங்களும் கலந்து கொள்ளும் வகையில், தங்களின் நிறுவனத்தில் பயிலும் மாணவா்கள் மற்றும் துறை பேராசிரியா்களை இணையதளத்தில் பதிவு செய்ய ஊக்குவிக்க வேண்டும்.
இது தொடா்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால், 011 24301950, 24303735 ஆகிய எண்களையோ, மின்னஞ்சல் முகவரியையோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.