மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பணி: விண்ணப்பிக்க அக்.9 கடைசி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பணிக்கு, அக்.9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பணி: விண்ணப்பிக்க அக்.9 கடைசி
Updated on
1 min read

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பணிக்கு, அக்.9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பணியிடங்கள் (16) ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கான தொகுப்பூதியமாக ரூ.33,250 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகுதியாக சமூகப் பணி, சமூகவியல், உளவியல், குற்றவியல், குழந்தை வளா்ச்சி உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்று, அவற்றில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. 40 வயதுக்கு மிகாமல் இருப்பவா்களும், குறிப்பிடப்பட்ட பிரிவுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியா்களும் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பத்தை,  இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, ஆணையா் அல்லது செயலா், மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், சமூக பாதுகாப்புத் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை 600 010 என்ற முகவரிக்கு, அக்.9-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 2642 1358 என்ற எண்ணை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com