நொய்யல் நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் நீர் திறக்க முதல்வர் உத்தரவு

நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் முறைவைத்து 20 நாள்களுக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,  கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், நொய்யல் கால்வாய் பாசன விவசாயிகள், கால்நடை தேவைகளுக்காகவும் நிலத்தடி நீர் உயரவும் நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து நீர் திறந்துவிட கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் தற்பொழுது உள்ள நீர் இருப்பை கணக்கில் கொண்டு, கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், நொய்யல் கால்வாயிலுள்ள 19403.70 ஏக்கர் பாசன பகுதிகளுக்கும், கால்நடை தேவைகளுக்காகவும், நிலத்தடி நீர் உயரவும் சிறப்பு நனைப்பிற்காக, நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து 9.10.2020 முதல் 28.10.2020 வரை உள்ள காலத்தில் முறைவைத்து 20 நாட்களுக்கு மிகாமல் 224.64 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன்.

விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com