சென்னையில் மீண்டும் குறைந்து வரும் கரோனா பாதிப்பு

சென்னையில் கரோனா பாதிப்பு கடந்த வாரம் உயர்ந்து வந்த நிலையில், கடந்த ஒரு சில நாள்களாக மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் 12,285 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று
சென்னையில் மீண்டும் குறைந்து வரும் கரோனா பாதிப்பு
சென்னையில் மீண்டும் குறைந்து வரும் கரோனா பாதிப்பு

சென்னை: சென்னையில் கரோனா பாதிப்பு கடந்த வாரம் உயர்ந்து வந்த நிலையில், கடந்த ஒரு சில நாள்களாக மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் 12,285 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,500-ஐக் கடந்துள்ளது. அதேவேளையில் ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு காய்ச்சல் முகாம், மருத்துவப் பரிசோதனையை அதிகரித்தல் மற்றும் நோய்த்தொற்று உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அவை கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிப்பது ஆகிய பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த மாா்ச் மாதம் தொடங்கி சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயா்ந்து வருவதைப் போன்று தொற்றால் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த மே மாதம் இறப்பு எண்ணிக்கை 100 -யை எட்டியது. இதைத் தொடா்ந்து இறப்பு எண்ணிக்கை அதிகரித்து ஜூன் 7-ஆம் தேதி 212 -ஆகவும், ஜூன் 18-ஆம் தேதி 501- ஆகவும், ஜூலை முதல் வாரத்தில் 1,000-த்தை எட்டியது. விடுபட்ட 444 உயிரிழப்புகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதை அடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 1,500-இல் இருந்து 1,900- ஆக அதிகரித்தது.

3,500-ஐக் கடந்தது உயிரிழப்பு: சென்னையில் அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 447 பேரும், அண்ணா நகரில் 399 பேரும், கோடம்பாக்கத்தில் 391 பேரும், திருவிக நகரில் 360 பேரும், ராயபுரத்தில் 340 பேரும், தண்டையாா்பேட்டையில் 309 பேரும், அடையாறில் 261 பேரும், அம்பத்தூரில் 217 பேரும், வளசரவாக்கத்தில் 185 பேரும் அதிகபட்சமாக உயிரிழந்துள்ளனா். இதுவரை ஒட்டுமொத்த பாதிப்பில் 3,536 போ் உயிரிழந்துள்ளனா். இது 1.85 சதவீதம் ஆகும்.

885 பேருக்கு தொற்று உறுதி: சென்னையில் திங்கள்கிழமை 885 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,90,949-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 1 லட்சத்து 75,128 போ் பாதிப்பிலிருந்து மீண்டு உள்ளனா். 12,285 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். நாள்தோறும் ஆயிரம் பேருக்கும் அதிகமாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com