உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்திற்கு காவலர்கள் ஒருங்கிணைந்து ரூ.3.38 லட்சம் நிதியுதவி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்திற்கு காவலர்கள் ஒருங்கிணைந்து ரூ.3.38 லட்சம் நிதியுதவி வழங்கினர்.
உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்திற்கு காவலர்கள் ஒருங்கிணைந்து ரூ.3.38 லட்சம் நிதியுதவி வழங்கினர்.
உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்திற்கு காவலர்கள் ஒருங்கிணைந்து ரூ.3.38 லட்சம் நிதியுதவி வழங்கினர்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றிய கே.வேலுமணி கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். உயிரிழந்த தலைமைக் காவலர் வேலுமணிக்கு விஜி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்த நிலையில் இவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் தலைமைக் காவலருடன் 1995 ஆம் ஆனது திருச்சி காவலர் மையத்தில் பயிற்சி பெற்ற முதலாம் அணியின் 300 காவலர்கள், சென்னை செயின்ட் தாமஸ் மௌன்ட் பயிற்சிப் பள்ளி காவலர்கள் 55 பேர் என இவர்கள் இணைந்து 3 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் மூலம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com