
சென்னையில் கரோனா பாதிப்பு
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 11,412 ஆகக் குறைந்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா பரவல் குறைந்து வருகிறது. சென்னையிலும் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது.
சென்னையில் இதுவரை 1,40,685 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,845 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 1,26,428 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 11,412 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கரோனா சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தோர் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, கோடம்பாக்கத்தில் 1,336 பேரும், அண்ணா நகரில் 1,338 பேரும், அம்பத்தூரில் 88 பேரும், அடையாறில் 946 பேரும், வளசரவாக்கத்தில் 930 பேரும், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.