காஞ்சிபுரம்: காவல்துறை சார்பில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் ஓரகடம் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 
காஞ்சிபுரம்: காவல்துறை சார்பில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வுக் கூட்டம்
காஞ்சிபுரம்: காவல்துறை சார்பில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வுக் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் ஓரகடம் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 

காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் ஓரகடம் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்றது. 

ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம், சுங்குவார் சத்திரம், இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் பல்வேறு தொழிற்சாலைகளின் பெண் நிர்வாகிகள் மற்றும் பெண் தொழிலாளர்கள் என சுமார் 350க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, ஸ்ரீபெரும்புதூர் உதவி காவல்கண்காணிப்பாளர் மருத்துவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

இதில், காஞ்சிபுரம் சரக காவல் துணைத்தலைவர் சாமுண்டீஸ்வரி சிறப்பு அழைப்பாளராக  கலந்துக்கொண்டு,   சிறுவர்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல்  குற்றங்களை எவ்வாறு  தடுப்பது, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் குறித்தும், வீட்டில் மற்றும்  வாகனங்களில் பயணிக்கும்  போது,  தொழிற்சாலைகளில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை  எவ்வாறு தவிர்ப்பது  குறித்தும் பாதிக்கப்படும் பட்சத்தில் எவ்வாறு சட்டரீதியாக  நடவடிக்கை  எடுக்க,  மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார். 

மேலும், சமூக வலைத்தளங்களில் இளம்பெண்கள் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் போது மிகவும் கவனமுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், தேவையில்லாத புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதை தவிர்ப்பது நல்லது எனவும் கூட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்களுக்கு அறிவுரை வழங்கி காவலன் செயலி குறித்தும் அதந் பயன்கள் குறித்தும் விளக்கி பேசினார். 

கூட்டத்தில்  பயிற்சி துணைக்காவல் கண்காணிப்பாளர் வைஷ்ணவி, காஞ்சிபுரம் டிஎஸ்பி மணிமேகலை உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com