
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,828 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,828 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,783 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 955 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 538 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..