கம்பம்: தமிழகத்தில் இருந்து கேரளத்திற்கு வர இ-பாஸ் இருந்தால்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்று இடுக்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி வழியாக கேரளாவிற்குள் செல்ல "இ-பாஸ்" ரத்து என்று ஒரு நாளிதழ் (தினமணி அல்ல) மற்றும் ஒரு ஊடகம் ஆகிவற்றின் தவறான செய்தியால், தமிழகத்தில் இருந்து ஏராளானோர் குமுளி வந்தனர்.
ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் பரிசோதனை முகாம் அதிகாரிகள் அவர்களை இ-பாஸ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று கூறி திருப்பி அனுப்பினார்.
இதனால் 6 மாதங்களுக்குப் பிறகு கேரளாவுக்குள் வேலைக்கு செல்லலாம் என்று வந்த தொழிலாளர்கள் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆவண சரிபார்ப்பு அதிகாரிகள் மற்றும் பரிசோதனை முகாம் அதிகாரிகள் கூறியதாவது:
வழக்கம்போல் தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து குமுளி வழியாக இடுக்கி உள்ளிட்ட கேரளாவின் பிற ஊர்களுக்கு வருவோர், கேரளாவில் இருந்து தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்கள் செல்வோர் "இ-பாஸ்" பெற்றுச் செல்லும் நடைமுறை அமலில் உள்ளது. தவறான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று, தெரிவித்தனர்.