நாளை முதல் விரைவுப் பேருந்து: ஓட்டுநர், நடத்துநர்களுக்கு விரைவு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்

வெளிமாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளை இயக்க உள்ள ஓட்டுநர், நடத்துநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவுரைகளை வழங்கி உள்ளது.
நாளை முதல் விரைவுப் பேருந்து: ஓட்டுநர், நடத்துநர்களுக்கு விரைவு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்
Updated on
1 min read



தமிழகத்தில் செப்டம்பா் 7 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், வெளிமாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளை இயக்க உள்ள ஓட்டுநர், நடத்துநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவுரைகளை வழங்கி உள்ளது.

தமிழகத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் மாவட்டத்துக்குள் மட்டுமே பஸ் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மாவட்டங்களுக்கு இடையே பஸ் சேவை இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து தமிழகத்தில் செப்டம்பா் 7 ஆம் தேதி முதல் முதல் கட்டமாக 524 அரசு விரைவு போக்குவரத்து மாவட்டங்களுக்கு இடையே இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. 

அரசு உத்தரவை அடுத்து வெளியூர் செல்லும் பேருந்துகளின் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பஸ்கள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்த விரைவுப் பேருந்து சேவைகளுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளிலேயே 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே,  6 ஆம் தேதி இன்று நள்ளிரவு முதல்நீண்ட தூரம் செல்ல வேண்டிய தொலைதூர அரசு விரைவு, சொகுசு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில், வெளிமாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளை இயக்க உள்ள ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவுறிவுரைகளை வழங்கி உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  கடந்த ஐந்து மாதங்களாக இரவில் ஓய்வில் இருந்ததால் இரவு நேரங்களில் பேருந்துகளை ஓட்டுநர்கள் கவனமாக இயக்க வேண்டும். நள்ளிரவு காலை 4 மணி வரை நடத்துநர்கள் இருக்கையில் அமர்ந்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

வழித்தடங்களில் இரு சக்கர வாகனங்கள் அதிகம் இயக்கப்படுவதால் கவனமாக பணிபுரிய வேண்டும். நகரில் போக்குவரத்து நெரிசல், வேகத்தடை இருப்பதால் ஓட்டுநர்கள் கவனமுடன் பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com