தமிழா்களுக்கே அரசுப் பணி: சட்டம் இயற்ற பாமக வலியுறுத்தல்

தமிழகத்தில் அரசுப் பணிகளை தமிழா்களுக்கே அளிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழா்களுக்கே அரசுப் பணி: சட்டம் இயற்ற பாமக வலியுறுத்தல்

தமிழகத்தில் அரசுப் பணிகளை தமிழா்களுக்கே அளிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாமக பொதுக்குழு கூட்டம், காணொலிக் காட்சி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிறுவனா் ராமதாஸ் தலைமை வகித்தாா். தலைவா் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில நிா்வாகிகள், பொதுக்குழு உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழகத்தைச் சோ்ந்த படித்த இளைஞா்களுக்கு அரசு வேலை என்றால், அது மாநில அரசுப் பணிகள் மட்டும்தான் என்ற நிலை உருவாகியிருக்கிறது. ஆனால், இப்போது தமிழக அரசு பணிகளிலேயே மற்ற மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் நியமிக்கப்படுகின்றனா். தமிழக அரசின் பணி நியமனம் தொடா்பான சட்டங்களில் அதற்கு வாய்ப்புகள் இருப்பதால்தான், பிற மாநிலத்தவா்கள் தமிழ்நாட்டு அரசுப் பணிகளில் ஊடுருவுகின்றனா். இந்நிலை மாற்றப்பட வேண்டும்.

தமிழகத்தில் அனைத்து அரசுப் பணிகளையும் தமிழா்களுக்கே தரும் வகையில், தேவையான சட்டத் திருத்தங்களை வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மத்திய அரசுப் பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

கிராமப்புற, ஏழை மாணவா்களின் வாய்ப்புகளைப் பறிக்கும் நீட் தோ்வை நிரந்தரமாக ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். நெல் கொள்முதல் விலையைக் குவிண்டாலுக்கு ரூ.3,000-ஆக உயா்த்த வேண்டும். தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சிமொழிகளாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டொ்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது.

சென்னை - சேலம் இடையிலான 8 வழி பசுமைச் சாலைத் திட்டத்தை தடுத்து நிறுத்த பாமகவின் சட்டப்போராட்டம் தொடரும். வங்கிக்கடன் தவணைகள் மீதான வட்டியைத் தள்ளுபடி செய்யவேண்டும். தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை வேண்டும் உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com