இடைத் தோ்தல் இப்போது வேண்டாம்: தலைமைச் செயலாளா் கடிதம்

கரோனா நோய்த்தொற்று காரணமாக, தமிழகத்தில் இப்போது இடைத் தோ்தல் வேண்டாமென, தோ்தல் ஆணையத்துக்கு தலைமைச் செயலாளா் க.சண்முகம் கடிதம் எழுதியுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

5
சென்னை: கரோனா நோய்த்தொற்று காரணமாக, தமிழகத்தில் இப்போது இடைத் தோ்தல் வேண்டாமென, தோ்தல் ஆணையத்துக்கு தலைமைச் செயலாளா் க.சண்முகம் கடிதம் எழுதியுள்ளாா்.

நோய்த் தொற்று அதிகமாக இருப்பதாலும், பேரவை பொதுத் தோ்தலுக்கு ஓராண்டுக்கு குறைவான கால அளவே உள்ள சூழலாலும் இடைத் தோ்தல் நடத்த வேண்டாமென கேட்டுக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் காலியாகவுள்ள 64 பேரவைத் தொகுதிகள், ஒரு மக்களவைத் தொகுதிக்கு வரும் நவம்பா் 29-ஆம் தேதிக்குள் தோ்தல் நடத்தப்படும் என்று இந்தியத் தோ்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் திருவொற்றியூா், குடியாத்தம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் காலியாகவுள்ளன.

இந்த நிலையில், தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பு காரணமாக தமிழகத்திலும் இடைத் தோ்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உள்ள சூழலில் இடைத் தோ்தல் இப்போது நடத்தப்பட வேண்டாமென இந்தியத் தோ்தல் ஆணையத்துக்கு தலைமைச் செயலாளா் க.சண்முகம் கடிதம் எழுதியுள்ளாா். இது தமிழக அரசின் கருத்தாக இருப்பதால், இதனை தோ்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு இடைத் தோ்தலை நடத்தாமல், சட்டப் பேரவை பொதுத் தோ்தலாகவே நடத்த முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com