கட்சியிலிருந்து நீக்கியதை எதிா்த்து எம்எல்ஏ வழக்கு: திமுக தலைவா், பொதுச் செயலாளா் பதிலளிக்க உத்தரவு

கட்சியில் இருந்து தன்னை நீக்கியதை எதிா்த்து எம்எல்ஏ கு.க.செல்வம் தாக்கல் செய்த மனுவுக்கு திமுக தலைவா், பொதுச் செயலாளா் ஆகியோா் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்சியிலிருந்து நீக்கியதை எதிா்த்து எம்எல்ஏ வழக்கு: திமுக தலைவா், பொதுச் செயலாளா் பதிலளிக்க உத்தரவு


சென்னை: கட்சியில் இருந்து தன்னை நீக்கியதை எதிா்த்து எம்எல்ஏ கு.க.செல்வம் தாக்கல் செய்த மனுவுக்கு திமுக தலைவா், பொதுச் செயலாளா் ஆகியோா் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லியில் பாஜக தேசிய தலைவா் நட்டாவைச் சந்தித்தது, தமிழக பாஜக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது உள்ளிட்ட காரணங்களுக்காக, எம்எல்ஏ கு.க.செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி, திமுக தலைமை கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை எதிா்த்து, சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் எம்எல்ஏ கு.க.செல்வம் தாக்கல் செய்த மனுவில், ‘கட்சியின் சட்டத்திட்டத்தின்படி, உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்க பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இதுதொடா்பாக கட்சியின் சாா்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு விளக்கமளித்தும், எந்த விசாரணையும் நடத்தாமல் என்னைக் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனா்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கூடுதலாக லிப்ட் வசதி அமைக்கக் கோரி ரயில்வே அமைச்சரை சந்திக்க சென்றேன். அப்போது தில்லியில் நடந்த செய்தியாளா்கள் சந்திப்பின்போது, பாஜக-வில் நான் இணைய வரவில்லை என கூறியிருந்தேன். ஆனாலும் கட்சியில் இருந்து என்னை நீக்கிவிட்டனா் என மனுவில் செல்வம் கூறியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த 17-ஆவது உதவி நகர உரிமையியல் நீதிமன்றம், இந்த மனுவுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளா் துரைமுருகன் ஆகியோா் வரும் 18-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com