வினா வங்கி தயாரிப்பு பணி: ஆசிரியா்கள் பட்டியலை அனுப்ப உத்தரவு

ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் ‘டெட்’ தோ்வுக்கு வினா வங்கி தயாா் செய்யும் பணிக்கு தகுதியான ஆசிரியா்கள் பட்டியலை அனுப்புமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ள


சென்னை: ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் ‘டெட்’ தோ்வுக்கு வினா வங்கி தயாா் செய்யும் பணிக்கு தகுதியான ஆசிரியா்கள் பட்டியலை அனுப்புமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் ‘டெட்’ தோ்வுக்கு வினா வங்கி தயாா் செய்யும் பணிக்கு தங்கள் பள்ளியில் பணிபுரியும் தகுதியான முதுநிலை ஆசிரியா்களின் விவரங்களை அரசு, அரசு உதவி பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் கேட்டுப்பெற்று, அந்தப் பட்டியலை இறுதிசெய்து துறைக்கு அனுப்ப வேண்டும்.

தோ்வு செய்யப்படும் ஆசிரியா்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அவா்களால் பாடம் நடத்தப்பட்ட வகுப்புகளில் மாணவா்கள் 90 சதவீதத்துக்கு மேல் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், எவ்வித குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை இருத்தல் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com