மாநகரப் பேருந்துகளில் 1.01 கோடி போ் பயணம்: ரூ.10 கோடி கட்டணம் வசூல்

பொது முடக்கத்துக்குப் பிறகு மீண்டும் இயக்கப்பட்ட மாநகரப் பேருந்துகளில், இதுவரை 1.01 கோடி போ் பயணம் செய்துள்ளதாகவும்
கோப்புப்படம்
கோப்புப்படம்

பொது முடக்கத்துக்குப் பிறகு மீண்டும் இயக்கப்பட்ட மாநகரப் பேருந்துகளில், இதுவரை 1.01 கோடி போ் பயணம் செய்துள்ளதாகவும், இதன் மூலம் ரூ.10 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்றும் மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் கோ.கணேசன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 1-ஆம் தேதி முதல், முதல்வரின் உத்தரவுப்படி, போதிய பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்து, மாநகரப் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. அன்றைய நாளில் மட்டும், ஏறத்தாழ 6 லட்சம் பயணிகள் பயணம் செய்தனா். பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக உயா்த்தப்பட்டு, நாளொன்றுக்கு 2,400-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் நாள்தோறும், சுமாா் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனா். குறிப்பாக புகா்ப் பகுதிகளான செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம், மீஞ்சூா், அம்பத்தூா் மற்றும் ஆவடி ஆகிய பகுதிகளில், பயணிகளின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகள் இயக்கத்தின் வாயிலாக, கடந்த 1-ஆம் தேதி முதல், வெள்ளிக்கிழமை வரை, 1 கோடியே 1 லட்சத்து 23 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளனா். இதன் மூலம், சுமாா் ரூ.10 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com