ரூ.1000 நிவாரணத் தொகை: தெருவோர வியாபாரிகள் கவனத்துக்கு..

பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1000/-நிவாரணத் தொகையை வழங்க தங்களின் வங்கி கணக்கு தொடர்பான விவரங்களை உடனடியாக மாநகராட்சியிடம் வழங்குமாறு ஆணையாளர் கோ. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
ரூ.1000 நிவாரணத் தொகை: தெருவோர வியாபாரிகள் கவனத்துக்கு..
ரூ.1000 நிவாரணத் தொகை: தெருவோர வியாபாரிகள் கவனத்துக்கு..


பெருநகர சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1000/-நிவாரணத் தொகையை வழங்க தங்களின் வங்கி கணக்கு தொடர்பான விவரங்களை உடனடியாக மாநகராட்சியிடம் வழங்குமாறு ஆணையாளர் கோ. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் பழனிசாமி, பெருநகர சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1000/- நிவாரணத் தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவு காலத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட 27,195 சாலையோர வியாபாரிகளில் இதுவரை சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, கைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு போன்ற விவரங்களை வழங்கிய 14,633 சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணத் தொகையாக முதல் கட்டமாக ரூ.1000/- மற்றும் இரண்டாம் கட்டமாக ரூ.1000/- சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

தற்போது மூன்றாம் கட்டமாக சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணத் தொகை ரூ.1000/- வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், இதுவரை முதல் மற்றும் இரண்டாம் கட்டம் நிவாரணத் தொகை பெறாத பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள், பெருநகர சென்னை மாநகராட்சியால் தங்களுக்கு வழங்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை (நகல்) எண், கைபேசி எண் (செல்லிடப்பேசி எண்), வங்கியின் பெயர் மற்றும் கிளை முகவரி, சேமிப்பு கணக்கு எண், கிளை குறியீட்டு எண், ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண் போன்ற விவரங்கள் கொண்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட மண்டலத்தில் வழங்கும் பட்சத்தில் நிவாரணத் தொகையை தங்கள் வங்கிக் கணக்கில் மாற்ற இயலும். 

எனவே, இந்த வாய்ப்பை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு ஆணையாளர் கோ. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com