செப்.24ல் சங்ககிரி உள்பட்ட 946 முகாம்களில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை

சங்ககிரி, எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் 946 முகாம்களில் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை செப்.24ல் தொடங்க உள்ளதாக மேற்கு மாவட்டச் செயலர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சங்ககிரி திமுக ஒன்றிய அலுவலகத்தில் செய்தியாளர்களிடத்தில் சனிக்கிழமை பேசுகிறார் சேலம் மேற்கு மாவட்ட செயலர் (பொ) டி.எம்.செல்வகணபதி.
சங்ககிரி திமுக ஒன்றிய அலுவலகத்தில் செய்தியாளர்களிடத்தில் சனிக்கிழமை பேசுகிறார் சேலம் மேற்கு மாவட்ட செயலர் (பொ) டி.எம்.செல்வகணபதி.
Updated on
1 min read

திமுக சேலம் மேற்கு மாவட்டத்திற்குள்பட்ட சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 946 முகாம்களில் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை செப்டம்பர் 24ம் தேதி வியாழக்கிழமை தொடங்க உள்ளதாக மேற்கு மாவட்டச் செயலர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

திமுக சேலம் மேற்கு மாவட்டச் செயலர் டி.எம்.செல்வகணபதி சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எல்லோரும் நம்முடன்  என்ற தலைப்பில் ஆன் லைன் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் தொடக்கி வைத்தார். அதனையடுத்து சேலம் மேற்கு மாவட்டத்திற்குள்பட்ட சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் செப்டம்பர் 24ம் தேதி 946 முகாம்களில் திமுக தொழில்நுட்ப அணியின் சார்பில் காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. 

இம்முகாம்களில் பொதுமக்கள், பட்டதாரி இளைஞர்கள், மகளிர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அனைவரும் தங்களது பெயர்களை கணினியில் பூர்த்தி செய்து உறுப்பினர் அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

மேலும் அவர் இம்முகாம்கள் இல்லாமல் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளின் தலைமையகத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடர்ந்து நடைபெற உள்ளன மற்றும் dmk.in/joindmk/en என்ற இணையதள முகவரியிலும் நேரடியாகப் பதிவு செய்யலாம் என்றார். மாவட்ட துணை செயலர்கள் க.சுந்தரம், த.சம்பத்குமார் ஆகியோர் உடனிருந்தனர். 

சங்ககிரியில் நாளை மாவட்ட அவசர செயற்குழுக்கூட்டம்

சங்ககிரியில் அபிநயா கலையரங்கத்தில் நாளை மாவட்ட அவசர செயற்குழுக்கூட்டம் நடைபெறுகிறது. 

சேலம் மேற்கு மாவட்டத்தின் சார்பில் இணையதளத்தில் அதிக உறுப்பினர்களை சேர்ப்பது மற்றும் கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் மாவட்டத்தின் அவசர செயற்குழுக்கூட்டம் சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம், தனியார் உணவக வளாகத்தில் உள்ள அபிநயா கலையரங்கத்தில் செப்டம்பர் 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதென சேலம் மேற்கு மாவட்டச்செயலர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com