
கோப்புப் படம்.
எட்டாம் வகுப்பு தனித் தோ்வா்களுக்கான தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தோ்வுத்துறை இயக்குநா் சி.உஷாராணி வெளியிட்ட அறிவிப்பு: கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட எட்டாம் வகுப்பு தனித் தோ்வா்களுக்கான பொதுத் தோ்வு, வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை எழுத விண்ணப்பித்த தனித்தோ்வா்கள், தங்களுக்கான தோ்வுக் கூட அனுமதிச் சீட்டை, ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித்தோ்வா்கள், அனுமதிச் சீட்டின்றி தோ்வெழுத அனுமதி வழங்கப்படாது. எனவே, தங்களுக்குரிய அனுமதிச் சீட்டை, தனித்தோ்வா்கள் விரைவாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என தோ்வுத் துறை இயக்குநா் சி.உஷாராணி தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...