திருச்சியில் 10 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு!

திருச்சியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
திருச்சியில் 10 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு!
Updated on
1 min read


திருச்சி: திருச்சியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் தொடக்கத்தில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 100-க்கும் அதிகமாகவே உள்ளது. தொற்றில் பாதிப்பில் குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் அச்சப்படத் தேவையில்லை என்கின்றனர் சுகாதாரத்துறையினர்.

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை கால நிலவரப்படி, மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின எண்ணிக்கை 10,083 ஆக உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 9,114 ஆக உள்ளளது. திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் மட்டும் 5,893 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5,424 பேர் குணமடைந்துள்ளனர். அந்தநல்லூர், லால்குடி, மணப்பாறை, மணிகண்டம், மண்ணச்சநல்லூர், மருங்காபுரி, முசிறி, புள்ளம்பாடி, தா.பேட்டை, திருவெறும்பூர், தொட்டியம், துறையூர், உப்பிலியபுரம், வையம்பட்டி ஆகிய 14 வட்டங்களை உள்ளடக்கிய ஊரகப் பகுதிகளில் 4,145 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,663 பேர் குணமடைந்துள்ளனர்.

கரானோ தொற்றின் காரணமாக இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர்.  திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அரியமங்கலம் கோட்டத்தில் 20 பேரும், கோ. அபிஷேகபுரம் கோட்டத்தில் 27 பேரும், பொன்மலை கோட்டத்தில் 14 பேரும், திருவரங்கம் கோட்டத்தில் 19 பேரும் என மாநகரப் பகுதியில் மட்டும் 80 பேர் உயிரிழந்துள்ளனர். இதுமட்டுமல்லாது, ஊரகப் பகுதிகளில் உள்ள 14 வட்டங்களில் 62 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com