கிருஷ்ணகிரியில் புனித வெள்ளி அனுசரிப்பு

கிருஷ்ணகிரியில் உள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் கிறிஸ்தவர்களால் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் புனித வெள்ளி அனுசரிப்பு



கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் உள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் கிறிஸ்தவர்களால் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.

ஏப்ரல் 11ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினம் இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாளாக அனுசரிக்கப்படும் புனித வெள்ளியானது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த தினத்தையும் அவர் அடைந்த துன்பங்களையும் நினைவுகூறும் நாளாகும்.

இயேசு மீண்டும் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர்  முந்தைய வெள்ளிக்கிழமை அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரியில் தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் பங்கேற்ற இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

இயேசு கிறிஸ்துவுக்கு முள் கிரீடம் அணிவிக்கப்பட்டு, சிலுவையை சுமந்தவாறு கல்வாரிக்கு சென்றதைப் போன்ற நிகழ்வு இங்கு நடைபெற்றது. இயேசு உயிர் நீத்த இந்த தினத்தை புனித வெள்ளியாக அனுசரிக்கப்படும் இந்த நாளில் நடைபெற்ற நிகழ்வில் கிறிஸ்தவர்கள், தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் கருப்பு உடை அணிந்து பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com